கப்பலில் 3 தொழிலாளர்கள் மூச்சுத் திணறி நடந்த கோர சம்பவம்
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள சரக்கு கப்பலில் தூய்மை பணியில் ஈடுபட்ட 3 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்தா என்பவருக்கு சொந்தமான பார்சி எனும் மிதவை கப்பலில் மாலத்தீவில் கட்டுமான பொருட்களை இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்துள்ளது. அடுத்த லோடு ஏற்றுவதற்காக கப்பலை தூய்மை செய்யும் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த ஜெனிசன் தாமஸ், உவரியைச் சிரோன் ஜார்ஜ் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராத விதமாக பணியின்போது விஷவாயு தாக்கியதில், 3-பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
