இந்த மாவட்டங்களில் மழை கொட்டப்போகுது! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 20.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிக பட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story