2வது நாளாக விட்டு விட்டு கொட்டும் கனமழை.. கூலான சென்னை

சென்னை 2வது நாளாக கொட்டி தீர்க்கும் கனமழை

சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 2 வது நாளாக அதிகாலையில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் காலை பணிக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

X

Thanthi TV
www.thanthitv.com