

ஏற்கனவே கைதானவர்களிடம் 4 நாட்கள் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், குட்கா உரிமையாளர்கள் மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோரிடம் மேலும் 3 நாள் விசாரணை நடத்த சி.பி ஐ நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது.
இதனை அடுத்து, 5 ஆம் நாளான இன்று மாதவராவ் மற்றும் சீனிவாசராவை மீண்டும் ஆலைகள் மற்றும் வீடு,அலுவலகங்கள்,ரகசிய குடோன்கள் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மாதவராவை குட்கா ஆலைக்கு அழைத்து சென்று குட்கா தயாரிக்க இயந்திரங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? எப்படி தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்தார்கள் ? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இதே போல் குட்கா தயாரிப்பில் ஆரம்பித்து ,விநியோகம் செய்த வரை உடந்தையாக இருந்த அதிகாரிகள் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், டேட்டாக்கள்,ஆவணங்கள்,லேப்டாப் மற்றும் பென் ட்ரைவ்கள் சிக்கியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.