பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு நன்கொடையை அள்ளி கொடுத்த ஜி.ஸ்கொயர் ஓனர்
இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் சார்பில் பழனி மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான பால ராமஜெயம் பெற்றோரின் 51வது திருமண நாளையொட்டி, பழனி கோவிலுக்கு 23 இருக்கைகள் அடங்கிய எலக்ட்ரிக் பேருந்து, 11 இருக்கைகள் அடங்கிய மினி எலக்ட்ரிக் பேருந்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பேட்டரி கார்கள் மற்றும் கன்றுடன் கூடிய பசுவை தானமாக வழங்கியுள்ளார்.
Next Story
