திடீரென டாஸ்மாக்கினுள் புகுந்த மர்ம கும்பல்.. - ஊழியர்களுக்கு விழுந்த சரமாரி அரிவாள் வெட்டு..

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அடுத்த வன்னிகோணந்தல் பகுதியில் அரசு மதுபானக் கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, பணவடலி சத்திரத்தை சேர்ந்த பால்துரை மற்றும் வன்னி கோணந்தல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரும் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரும் கடையின் வரவு, செலவு கணக்கை சரிபார்த்து கொண்டிருந்த போது, திடீரென கடையினுள் புகுந்த மர்மகும்பல், இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், தரமறுத்த இருவரையும் அரிவாளால் வெட்டி தப்பியோடியுள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கடையில் இருந்த சிசிடிவியை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இரு சக்கர வாகனத்தில் வந்து 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்களை தாக்கியது தெரியவர, போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com