சொந்த பேத்தியை கடத்தி கதறி துடித்த தாத்தா - கடைசியில் வெளிவந்த பகீர் தகவல்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தை கடத்தப்பட்ட வழக்கில், குழந்தையின் தாத்தவே கடத்தலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் குண்டங்கள் காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது நான்கு வயது குழந்தை காணாமல் போன நிலையில், நான்கு நாட்கள் கழித்து, நாமக்கல்லில் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் குழந்தையை ஒப்படைத்த குமார் என்ற முதியவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் இருவரும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது. மேலும்,குழந்தையின் தாத்தா யோகி தாஸ், தன் மகன் குடித்துவிட்டு வந்து குழந்தையை தாக்குவதாகவும் எனவே குழந்தையை பாதுகாப்பாக வைக்கம்படியும் கொடுத்துச் சென்றார் என போலீஸ் விசாரணையில் முதியவர் குமார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து யோகிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்