Govt School Teacher Death | 9th மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக.. பிடிபட்ட அரசு ஆசிரியர் மரணம்
போக்சோ வழக்கில் சிறையில் இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் மரணம்
தருமபுரி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சிறையில் இருந்த அரசுப்பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்தார். நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் மணிவண்ணன். இவர், அதே பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் வைத்தே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு தருமபுரி சிறையில் அடைக்க இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Next Story
