ஸ்ரீபெரும்புதூரில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 'சியட்' டயர் நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன் கையெழுத்தானது. சென்னை தலைமைச்செயலகத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சியட் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில், முதலமைச்சர் பழனிசாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.