போராடி சாதித்த அரசுப் பள்ளி மாணவன் - நீட் தேர்வில் மாநில அளவில் `டாப்’
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் படித்த மாணவன் நீட் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்திருப்பது கிராமத்தினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பண்டசீமானூரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த நிலையில், 563 மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றார். இந்த நிலையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்ற இவர், சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் 563 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ளார். தற்போது மருத்துவ படிப்பிற்காக எம்.எம்.சி கல்லூரியில் விண்ணபித்துள்ளார். மாணவரை நேரில் சந்தித்த, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்துள்ளார்.
Next Story
