வகுப்பறைகள் இல்லாததால் கோயிலில் படிக்கும் குழந்தைகள்.. வேதனை தெரிவிக்கும் ஊர் மக்கள்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், கோயில் வளாகத்தில் அரசுப் பள்ளி வகுப்புகள் நடத்தப்படுவது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட, இடம் வாங்கிக் கொடுத்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Next Story
