தங்கம் விலை கடந்த வாரத்தில் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு சவரன் 28 ஆயிரத்து 912 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் 184 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 96 ரூபாயாக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கள் 23 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 637 ஆயிரமாக உள்ளது. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தையில் வங்கித்துறை பங்குகள் அதிக சரிவைக் கண்டுள்ளன. இதன் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.