Eid al-Adha | Dindigul | ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி வாரச்சந்தையில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தையில் விற்பனைக்கு குவிந்த நிலையில் எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று ஒரு கிடா ஆடு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மேலும் வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
