குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை - கையில் பிடித்து நிற்கும் அவலம்.. வைரலாகும் புகைப்படம்

x

திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி.இவர் வயிற்று வலி காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு பரிந்துரை செய்த நிலையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை காரணமாக கலைவாணியின் உறவினரான சிறுவன் ஒருவர் குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி நின்றுள்ளார்.

திருவாரூர் அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் நாகப்பட்டினம் மயிலாடுதுறை போன்ற அண்டை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினந்தோறும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோன்று அவசர சிகிச்சை பிரிவிலும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை காரணமாக நோயாளியின் உறவினரே குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி நின்ற அவலம் அரங்கேறி உள்ளது.இதனை அங்கிருந்த ஒருவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.மேலும் இது குறித்து கலைவாணி தரப்பில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்