Thiruvannamalai | Police | கஞ்சா புகார் - கிரிவலப் பாதையில் சாதுக்களிடம் போலீசார் திடீர் சோதனை
Thiruvannamalai | Police | கஞ்சா புகார் - கிரிவலப் பாதையில் சாதுக்களிடம் போலீசார் திடீர் சோதனை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாதுக்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 14 கிலோ மீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து புதிதாக வரும் சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் சிம்ம தீர்த்தகுளம் அருகே நடைபாதையில் வசித்து வந்த சாதுக்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் போதைப் பொருட்கள் உள்ளனவா என ஆய்வு செய்ததுடன், அருகிலுள்ள காட்டுப் பகுதிகளிலும் சோதனை நடத்தினர். மேலும், சாலையோரங்களில் தொடர்ந்து தங்காமல் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு புதியதாக வந்த சாதுக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
