படுகொலை செய்யப்பட்ட மாரியம்மாள் - 3 பெண் பிள்ளைகளின் எதிர்காலம்...?
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாளும் படுகொலை செய்யப்பட்டார்.
"உயிரிழந்த பணிப்பெண் குடும்பத்துக்கு திமுக நிதி உதவி"
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு உதவும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து, மாரியம்மாள் இல்லத்திற்கு சென்ற பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார். மாரியம்மாளின் வருமானத்தை நம்பி, அவரது வயது முதிர்ந்த தாயார் , மற்றும் மூன்று மகள்கள் இருந்த நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
