Diesel | Petrol Bunk| டீசல் போட்டு முடித்து காரின் `பின்புறம்’ பார்த்த பங்க் ஊழியருக்கு பயங்கர ஷாக்

டீசல் போட்டு முடித்து காரின் `பின்புறம்’ பார்த்த பங்க் ஊழியருக்கு பயங்கர ஷாக்

#diesel #petrolbunk #car

நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரில் வந்து டீசல் நிரப்பி ரூ.3,500 மோசடி நெல்லையில், நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரில் வந்து 35 லிட்டர் டீசல் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் சாலையில், பாளையங்கோட்டை அடுத்த ஆட்சிமடம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான டீசலை நிரப்பிய மர்ம நபர், பணம் கொடுக்காமல் காரில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில், பெருமாள்புரம் காவல்துறையினர் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com