IIT | Naan Muthalvan | அரசு பள்ளி டூ IIT - கைகொடுத்த நான் முதல்வன் ... விண்ணை தொடப்போகும் விண்வெளி நாயகி
நான் முதல்வன் திட்டத்தில் பயின்று, JEE தேர்வில் வெற்றி பெற்ற பட்டாசு தொழிலாளியின் மாற்றுத்திறனாளி மாணவியான யோகேஸ்வரி, மும்பை IIT-ல் Aero space Engineering படிக்க தேர்வாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரியின் தந்தை செல்வம் என்பவர் தேநீர் கடை ஊழியராகவும், தாய் கனகவள்ளி பட்டாசு தொழிலாளராகவும் உள்ளனர். வறுமையிலும் விடாமுயற்சியால் மும்பை ஐ.ஐ.டி.யில் படிக்க தேர்வாகி உள்ள வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளி அரசு பள்ளி மாணவியான யோகேஸ்வரியை, மாவட்ட ஆட்சியர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளர். இதுகுறித்து பேசிய மாணவி, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களாலும் எதையும் சாதிக்க முடியும் என பிற மாணவர்களுக்கும் நம்பிக்கை கூறியுள்ளார்.
Next Story
