பழங்குடி இனத்தவரை பிடித்து வைத்திருக்கும் வனத்துறை - பரபரப்பு புகார்

x

ராமநாதபுரம் அருகே, நரிக்குறவர் இன இளைஞரை வனத்துறையினர் பிடித்து வைத்துள்ள நிலையில், அவரை விடுவிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. ராமநாதபரம், எம்.ஜி.ஆர் நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் மீது வனத்துறையினர் தவறாக குற்றம்சாட்டி, அடைத்து வைத்துள்ளதாக நரிக்குறவர் இன மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், திருட்டு, கொள்ளை, வேட்டை சம்பவங்களை நடத்துவதாக தங்கள் மீது போலியாக குற்றம்சுமத்தி வனத்துறையினர் தொந்தரவு தருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்