கோவில் தேர் பற்றி எரிந்த விவகாரம்... ஸ்பாட்டிற்கு சென்ற அதிகாரிகள்... | Fire Accident | vandhavasi
தந்தி டிவி செய்தி எதிரொலியால் வந்தவாசியில் எரிந்த கோவில் தேரை தடய அறிவியல் நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வர் கோவிலுக்கு சொந்தமான தேர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் ஒளிபரப்பான நிலையில், வேலூர் தடய அறிவியல் நிபுணர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் தேர் எரிந்ததற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
