சாமிக்கு ஏற்றிய விளக்கால் நடந்த விபரீதம்.. கொழுந்து விட்டு எறிந்த வீடு...
ஓசூரில் சாமிக்கு பூஜை செய்வதற்காக ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து பரவிய தீயில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மணி என்பவர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மணியின் மனைவி வீட்டிலிருந்த சாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, அடித்த காற்றில் விளக்கில் எரிந்த தீ அருகில் இருந்த பொருட்களுக்கு முழுவதுமாக பரவியதில் பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story