சமைக்கும் போது நடந்த விபரீதம்.. கண்ணிமைக்கும் நொடியில் கருகிய வீடு

x

திண்டுக்கல் மாவட்டம் சூசைப்பட்டி கிராமத்தில் 80 வயது மூதாட்டி சமைத்த போது ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசம் அடைந்தது. வீட்டிலிருந்த விறகு அடுப்பில் சமையல் பாத்திரத்தை வைத்து, நெருப்பு பற்ற வைத்துவிட்டு, வெளியே இருக்கும் திண்ணையில் வந்து மூதாட்டி அமர்ந்துள்ளார். இதில் அடுப்பு அருகே இருந்த தென்னை மட்டை மற்றும் விறகுகள் மீது நெருப்பு விழுந்ததில் வீடு முழுவதும் மளமளவென தீ பரவியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ‌ தீயை அணைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்