கரும்பு விவசாயம் பாதிப்பு - மனவேதனையில் விஷம் குடித்த விவசாயி...

கரும்பு தோட்டம் அழிந்து போனதால் அவர் வேதனையில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கரும்பு விவசாயம் பாதிப்பு - மனவேதனையில் விஷம் குடித்த விவசாயி...
Published on
தஞ்சாவூரை அடுத்த தோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர், தனது நிலத்தில் கரும்பு , தென்னை, வாழை சாகுபடி செய்திருந்தார். கஜா புயலால் அனைத்தும் சேதமடைந்ததால், அவர் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் கரும்பு கொல்லையில் விஷம் குடித்து, மயங்கிய நிலையில், கிடந்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சாமிக்கண்ணுவை கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கரும்பு தோட்டம் அழிந்து போனதால் அவர் வேதனையில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com