குடும்பத் தகராறு - கணவரை சரமாரியாக தாக்கிய 2வது மனைவி
குடும்பத் தகராறு - கணவரை சரமாரியாக தாக்கிய 2வது மனைவி
தர்மபுரி அருகே இரண்டாவது மனைவி கணவரை இரும்புக் குழாயால் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
நத்தள்ளியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர், குஸ்மா மற்றும் சங்கவி ஆகிய இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சங்கவிக்கு ஏற்பட்ட கர்ப்பக் கலைவுக்குத் தங்கராஜ்தான் காரணம் எனச் சாமியார் ஒருவர் கூறியதாகத் தெரிகிறது.
மேலும், தங்கராஜ் வேறொரு பெண்ணுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி சங்கவி, தனது சகோதரியுடன் வந்து தங்கராஜை விளக்குமாறாலும் இரும்புக் குழாயாலும் சரமாரியாகத் தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் தங்கராஜ் மயங்கி விழுந்த நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
