ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரில் மோசடி - மாணவர்களை தாக்கி செல்போன், நகை பறிப்பு

சென்னை வளசரவாக்கத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று கூறி கல்லூரி மாணவர்களிடம் செல்போன், நகைகளை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரில் மோசடி - மாணவர்களை தாக்கி செல்போன், நகை பறிப்பு
Published on
சென்னை, வளசரவாக்கத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று கூறி கல்லூரி மாணவர்களிடம் செல்போன், நகைகளை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அனீஸ் ராஜ், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். கல்லூரிக்கு அருகே, ஒரு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியுள்ள நிலையில், நேற்றிரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. தங்களை ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று கூறிய அந்த கும்பல், மாணவர்களை தாக்கி விலை உயர்ந்த 8 செல்போன்கள், பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் அடிப்படையில், ராயலா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com