பெண் மீது காரை விட்டு மோதிய கொடூரம்-சிக்கிய `எமகாதக' Ex பாஜக நிர்வாகி
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக 20க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த பாஜக முன்னாள் நகர செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி சூளைபகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக அவிநாசியைச் சேர்ந்த பாஜக முன்னாள் நகர செயலாளர் நவீன்குமார், ஆனந்தி என்பவர் உட்பட 20க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ஏழு லட்சம் ரூபாய்க்கும் மேல் பெற்றுக் கொண்டு, வீடு வாங்கித் தராமல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. பணத்தை திரும்பக்கேட்டபோது மிரட்டியதுடன், ஆனந்தி மீது காரை விட்டு மோதி தள்ளியதும் தெரியவந்தது.
Next Story
