Organ Donation | ``தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும்’’ - பிள்ளைகள் முடிவு

``தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும்’’ - பிள்ளைகள் முடிவு

``தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும்’’ - பிள்ளைகள் முடிவு.. நேரில் வந்து உடலுக்கு சல்யூட் அடித்த அரசு #organdonation #organtransplantation தந்தை மறைந்தாலும் பிறர் மூலம் வாழ வேண்டும் என முடிவெடுத்த பிள்ளைகள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரவிச்சந்திரன் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தந்தை மறைந்தாலும் அவர் பிறர் மூலம் வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கில், அவரது பிள்ளைகள் மற்றும் மனைவி எடுத்த முடிவைத் தொடர்ந்து, ரவிச்சந்திரனின் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டுப் பலருக்குப் பொருத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கொடிவேரி மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது, அவரது உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். உயிரிழந்த நிலையிலும் சமூக அக்கறையுடன் செயல்பட்ட அக்குடும்பத்தினரை மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com