"பழனிக்கே காவடி எடுத்தாலும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு.." முதல்வர் போட்ட ட்வீட்
பழனிக்கே காவடி எடுத்தாலும் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கிடைக்காது
பழனிக்கே பால் காவடி எடுத்தாலும், பாஜக-அதிமுக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு, 7 ஆயிரம் கோடி ரூபாய் கோயில் சொத்துகள் மீட்பு, தேவாலயங்கள், மசூதிகள் புனரமைப்பு என அனைத்து பக்தர்களிடமும் ஸ்கோர் (score) செய்துள்ளது திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்தியும், வார்டுக்கு ஒரு ஓட்டு என ஆபத்தில் தத்தளிக்கும் கட்சியினர், மதத்திற்கு ஆபத்து என்று மரு ஒட்டிக்கொண்டு வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
