2026 தேர்தலுக்கான `முதல்’ வாக்குறுதியை அறிவித்த ஈபிஎஸ்
திமுகவினால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் மீட்டுத் தருவேன் என்பதே 2026ம் ஆண்டு தேர்தலுக்கான தனது முதல் வாக்குறுதி என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான் எனக் குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
