பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை | கோவி.செழியன் கொடுத்த புதிய அப்டேட்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், ஜூன் 27 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கலந்தாய்வு தொடங்கும் நாள் ஏஐசிடிஇ நாட்காட்டியின் படி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Next Story
