பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் கணவனையே கொன்ற மனைவி - தஞ்சையில் அதிர்ச்சி

x

பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் கணவனையே கொன்ற மனைவி - தஞ்சையில் அதிர்ச்சி

தஞ்சாவூரில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி-சிந்தனை செல்வி தம்பதியினர். கட்டுமான தொழிலாளியான கலியமூர்த்தி தினமும் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதேபோல கடந்த 22ஆம் தேதி இரவு குடித்துவிட்டு மனைவி சிந்தனை செல்வியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிந்தனை செல்வி கணவர் கலியமூர்த்தியை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இதனையடுத்து மனைவி சிந்தனை செல்வியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்