Nilgiris | Wild Elephant | இறந்துவிட்டதென அருகில் சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த யானை

இறந்துவிட்டதென அருகில் சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த யானை

இறந்துவிட்டதென அருகில் சென்றவர்களுக்கு ஷாக் கொடுத்த யானை

நாடுகாணியில் தேயிலைத் தோட்டத்தில் ஓய்வெடுத்த காட்டு யானை இறந்ததாக நினைத்து அருகில் சென்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாடுகாணி டான் டீ தேயிலைத் தோட்டத்தில் யானை ஒன்று படுத்துக் கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள், அது இறந்துவிட்டதாக நினைத்து அருகில் சென்றனர். ஆனால் அருகில் சென்றபோது யானை அமைதியாக உறங்கிக் கொண்டு மூச்சுவிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அங்கிருந்து விலகிச் சென்றனர். கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. மனிதர்களைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்த யானையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com