யானை வேட்டை= கைதி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் - வீடியோ வைரல்

x

தருமபுரி அருகே பென்னாகரம் வனப்பகுதியில் யானையை வேட்டையாடி தந்தம் கடத்திய வழக்கில் கைதாகி தப்பியவர், காப்புக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. துப்பாக்கி உடன் சடலமாக மீட்கப்பட்டவர், செந்தில். இவரை, வனப்பகுதிக்குள் யானையை சுட்டுக் கொன்ற விதம் குறித்த விசாரணைக்காக, காவிரி ஆற்றின் மறுகரைக்கு தமிழக வனத்துறையினர் அழைத்து சென்ற போது, கர்நாடக வனத்துறையினரும் இணைந்து வந்ததாக கூறப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட வனத்துறையிரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எப்படி ஒரு குற்றவாளி தப்பியோட முடியும் எனப் பல கேள்விகள் எழுந்துள்ள சூழலில் தற்போது, இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில், குற்றவாளியை விசாரணைக்காக அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்