தேனி மாவட்டம் பத்ரகாளிபுரம் பகுதியில், 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அப்பகுதியில் பணியாரக்கடை நடத்தி வரும் முதியவர் அய்யப்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.