எழும்பூர் நிலைய கட்டுமான பணி.."முக்கிய ரயில்கள் மாற்றம்" -ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையிலிருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ், குருவாயூர் செல்லும் ரயில், கொல்லம் விரைவு ரயில், சென்னை மதுரை தேஜஸ் விரைவு ரயில், மன்னார்குடி விரைவு ரயில் ஆகிய ரயில்கள் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரி பயணிகள் ரயில் , ஹைதராபாத் செல்லும் விரைவு ரயில் , மதுரை பிகினர் வார விரைவு ரயில், ஆகியவை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
