சென்னையில் தினத்தந்தி, விஐடி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் கல்விக் கண்காட்சி
தினத்தந்தி மற்றும் விஐடி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கல்வி கண்காட்சி சென்னையில் தொடங்கியது.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்ட தினத்தந்தி மற்றும் விஐடி கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கல்வி கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த கல்வி கண்காட்சியில் விவசாயம், பொறியியல், கலை, அறிவியல், அனிமேஷன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 70-க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்கள், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி குறித்த சந்தேகங்களை கல்வி கண்காட்சியின் வாயிலாக தீர்த்துக் கொள்ள முடிந்தது என்றும் கல்வி கண்காட்சி மிகப்பெரிய உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தனர்
Next Story
