பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தினத்தந்தி சார்பில் நிதியுதவி...

நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு தினத்தந்தி சார்பில், தலா பத்தாயிரம் ரூபாய் கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட ஆட்சியர் மலர்விழி வழங்கினார். நிதி உதவியை பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com