Nilgiris Festival | `பூலோக கைலாயம்' - வேட்டைக்கொருமகன் திருக்கோயிலில் அறுவடை திருவிழா

`பூலோக கைலாயம்' - வேட்டைக்கொருமகன் திருக்கோயிலில் அறுவடை திருவிழா

#Nilgiris #Festival #Thiruvizha #Devotional #ThanthiTV

Nilgiris Festival | `பூலோக கைலாயம்' - வேட்டைக்கொருமகன் திருக்கோயிலில் சீரும் சிறப்புமாக நடந்த அறுவடை திருவிழா

நீலகிரி மாவட்டம், கூடலூர் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் நம்பாலக்கோட்டை அருள்மிகு வேட்டைக்கொருமகன் திருக்கோவிலில், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்களுடன் புத்தரி கதிர் அறுவடைத் திருவிழா

சிறப்பாக நடைபெற்றது. கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான புத்தூர் வயல், தொரப்பள்ளி, மேம்பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வரும் விவசாயக் குடும்பத்தினர், ஆண்டுதோறும் இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். விரதமிருந்த ஒருவர் வயலில் இருந்து பால் கதிர்களை அறுவடை செய்து கோவிலுக்குக் கொண்டு வந்தார். தொடர்ந்து, வனதேவதைக்குப் படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டு, கதிர்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த பாரம்பரிய விழாவில், பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சிகளுடன் விவசாயிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com