சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளிடம் பணம் பெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 9 மணிக்கு தொடங்கி, 9 மணி நேரத்துக்கும் மேலாக, 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஏராளமாக பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.