திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா - அதிமுக மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் 137 ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் கோவில் நிர்வாகத்தினருக்கு நன்கொடை வழங்கினார். இதனை தொடர்ந்து வாலாஜாபேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற படவேட்டம்மன் ஆலயத்தில் புதிய ஆலயங்கள் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.