"கட்சி மீட்டிங் மாறி பேசாதீங்க.." - முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் வாக்குவாதம்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருந்த மேடையில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேஜி, ராஜலட்சுமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது மற்றொரு தரப்பினர் அரசியல் பேச வேண்டாம் என்று சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை செய்வதறியாது முன்னாள் அமைச்சர்கள் பார்த்து கொண்டு இருந்தனர்...
Next Story
