திமுக தலைவர் உடல்நிலையால் மனமுடைந்த கட்சி நிர்வாகி : பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த குமரன் நேற்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
திமுக தலைவர் உடல்நிலையால் மனமுடைந்த கட்சி நிர்வாகி : பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தவர் மருத்துவமனையில் உயிரிழப்பு
Published on

சென்னை அருகே உள்ள கொரட்டூர் பகுதியின் 84-வது திமுக வட்ட துணை செயலாளராக இருந்தவர் குமரன். திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த இவர், நேற்று தனது வீட்டின் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com