

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நேற்றைய மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருப்பதாக கூறினார். இதனை கண்டித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆளுநர் உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.