

"தொழிலாளர்களை பாதுகாக்கும் இயக்கம் திமுக தான்"
தொழிலாளர்களை பாதுகாக்கும் இயக்கமாக திமுக இருந்து வருவதாகவும், உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் அடக்குவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சிதம்பரம் நகரில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மே 23ஆம் தேதி தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு விடிவு காலம் வரும் என்றார்.