இடப்பிரச்சனையில் ஏற்பட்ட தகராறு - கடைசியில் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்

x

நிலத்தகராறில் கைகலப்பு - ஒருவர் உயிரிழப்பு - 3 பேர் கைது

பல்லடம் அருகே நிலத்தகராறில் கைகலப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், அதில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாகராஜன் மற்றும் அவரின் உடன் பிறந்த 2 பேர் என 3 பேருக்கு பல்லடம் மங்கலம் சாலை நாரணாபுரம் பகுதியில் சொந்தமாக 41 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கம்பிவேலி அமைப்பது தொடர்பாக, அருகே உள்ள நிலத்தின் உரிமையாளரான மற்றொரு தரப்பினர் உடன் தகராறு இருந்து வந்தது. இதனிடையே, நில அளவையர் மூலம் நிலத்தை அளக்காமல் கம்பிவேலி அமைக்க முயன்றபோது, 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில், மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்