Dindigul | TN Police | தந்தையுடன் தகராறு - வீட்டையே கொளுத்தி; ஒரு உயிரை எடுத்த கொடூர மகன்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தந்தையுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் வீட்டிற்கு தீ வைத்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். சித்தரேவை சேர்ந்த ராஜாங்கம் என்பவருக்கும் அவரது மகன் பூபதிக்கும் இடையே சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூபதி, குடும்பத்தில் தனக்கு ஏதும் செய்யவில்லை எனக்கூறி, வீட்டிற்கு தீ வைத்ததுடன், அருகில் கட்டி வைத்திருந்த ஆட்டை கல்லை போட்டு கொன்று விட்டு தப்பியோடியதாக புகார் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
