2-வது மனைவிக்கு கத்திகுத்து : 2-வது கணவன் வெறிச்செயல்

திண்டுக்கல்லில் இரண்டாவது மனைவியை அவரது இரண்டாவது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2-வது மனைவிக்கு கத்திகுத்து : 2-வது கணவன் வெறிச்செயல்
Published on
திண்டுக்கல்லில் இரண்டாவது மனைவியை அவரது இரண்டாவது கணவரே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் ஆர்.வி. நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ராஜா என்பவர் தனது இரண்டாவது மனைவி பிரியாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய போலீசார் தலைமறைவான மணிகண்டன் ராஜாவை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com