Dindigul | பூம்பாறை பட்டியல் இன இளைஞர் கொ*ல வழக்கு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

Dindigul | பூம்பாறை பட்டியல் இன இளைஞர் கொ*ல வழக்கு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

Dindigul | பூம்பாறை பட்டியல் இன இளைஞர் கொ*ல வழக்கு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் கொடைக்கானல் பூம்பாறையைச் சேர்ந்த பட்டியல் இன இளைஞர் ராமர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரும் உடலை வாங்க மறுத்த அவர்கள், குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக ஏற்கனவே ஒருவர் சரணடைந்த நிலையில், மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com