திண்டுக்கல்லில் வாகன சோதனையின் போது தகராறு செய்து தப்பிய கொலைக் குற்றவாளி அல் ஆஷிக்-ஐ போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தமது கும்பலுடன் வேடசந்தூர் பகுதியில் ஆஷிக் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கூட்டாளிகளுடன் வந்த ஆஷிக்கை மடக்கினர். அதில், 2 இருசக்கர வாகனங்களுடன் 5 பேரை கைது செய்த போலீசார், அனைவரையும் சிறையில் அடைத்தனர். ஆனால், காரில் ஆஷிக் தப்பி விட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆஷிக்கை பிடிக்கும் போலீசாருக்கு ஆதரவாக சமூக வளைதளத்தில் பதிவிட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட முக்கிய நபர்களை ஆஷிக் கொலை செய்ய திட்டமிட்டு அங்கு முகாமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.