திண்டுக்கல் : லாரி கவிழ்ந்த விபத்து - 9 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் : லாரி கவிழ்ந்த விபத்து - 9 பேர் படுகாயம்
Published on

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். சேடபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் லாரியில் காய்கறி ஏற்றிக்கொண்டு, சென்னை பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏழு பேருடன் சென்றுள்ளார். அந்த லாரி வத்தலகுண்டு சாலையில் வக்கம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததில், சாலையோரம் தலைக்குப்புற கவிழந்தது. இதில் லாரியின் அடியே சிக்கி கொண்டவர்களை உடனடியாக பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com